பாஜக ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

பாஜக ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பாஜக ரத யாத்திரைக்கு மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்காள பாஜக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரதயாத்திரைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி மேற்கு வங்காள அரசை அறிவுறுத்தியும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.