பாஜக வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் பெண்ணுக்கு இடம்

பாஜக வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் பெண்ணுக்கு இடம்

பாஜக வேட்பாளர் பட்டியலில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார். அவர் மேற்கு வங்கத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகனை எதிர்த்து போட்டியிட உள்ளார். மேற்குவங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் இதுவரை 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை பாஜக அறிவித்துள்ளது. இதில், முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் மக்களவை தொகுதி யில் மபுஜா கதுன் (47) போட்டியிடு வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். 

“என்னுடைய தொகுதியில் உடனடி முத்தலாக் நடைமுறையால் பாதிக் கப்பட்ட முஸ்லிம் பெண்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப் படும்.

இந்த முறையை ஒழிக்கவும் பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் குறித்து பிரச்சாரம் மேற் கொள்வேன்” என்றார் மபுஜா கதுன்.

மபுஜா கதுன் ஏற்கெனவே, தக் ஷின் தினஜ்பூர் மாவட்டத் திலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சார்பில் 2 முறை சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், 2016 பேரவைத் தேர்தலில் தோல்வி யடைந்த இவர், 2017-ல் பாஜகவில் சேர்ந்தார்.