பாடம் குறையும் பயிற்சி கூடும்

பாடம் குறையும் பயிற்சி கூடும்

இனி வரும் கல்வியாண்டுகளில் பள்ளி குழந்தைகளுக்கு பாடத்திட்டங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக திறன் மேம்பாட்டு பயிற்சியும், விளையாடு பயிற்சியும் அதிகரிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

வரும் கல்வியாண்டில் பாடங்கள் 10 முதல் 15 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அடுத்த கல்வியாண்டு முதல் 15 முதல் 20 சதவிகிதம் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால், குழந்தைகள் பாடத்தில் நல்ல கவனம் செலுத்துவதோடு விளையாட்டு மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சிகளிலும் மேம்பாடு அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.