பாதுகாப்புத்துறையிலிருந்து நற்செய்திகள்

பாதுகாப்புத்துறையிலிருந்து நற்செய்திகள்

*சென்னை - திருச்சி இடையே செல்லும் பாதுகாப்புத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழில் விரைவு சாலையை  நாளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைக்கிறார். திருச்சியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்கிறார்.சென்னை - திருச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள  இந்த விரைவு சாலை ஓசூர், கோயம்பத்தூர் சேலம் வழியாக செல்லும். 

தமிழ்நாட்டிலும் உத்திர பிரதேசத்திலும் இந்த விரைவு சாலைகளில் பாதுகாப்புத்துறை உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படும். என்று பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

* ராணுவ போலீஸில் 20% பெண்களை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.