"பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் "

"பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் "

ராமலிங்கம் கொலைக்கு பாமக நிறுவனர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருபுவனம் பகுதியில் நடந்த மதமாற்றத்தை ராமலிங்கம் தட்டிக் கேட்டதாகவும், அது தொடர்பாக சிலருடன் அவருக்கு மோதல் இருந்ததாகவும் கூறபடுகிறது. அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குழைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக்கூடாது, இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலபடுத்தப்பட வேண்டும்"என்று கூறியுள்ளார்.