"பாமக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு"

"பாமக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு"

திருவிடைமருதூர் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மேலேதூண்டிவிநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 42). பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவர் கடந்த 5-ந் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன்(தஞ்சை), சீனிவாசன்(அரியலூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமதுரியாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.