பாமக பிரமுகர் கொலை வழக்கு - 5 பேர் கைது

பாமக பிரமுகர் கொலை வழக்கு - 5 பேர் கைது

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதி யாகூப் மகன் சர்புதீன்(60), மந்திரி அலி மகன் முகமது ரிஸ்வான்(23), குறிச்சிமலை ஆஜாபகுதின் மகன் முகம்மது ரியாஸ்(27), திருபுவனம் சர்தார்கான் மகன் நிஜம் அலி (33), திருவிடைமருதூர் அப்துல் கலாம் மகன் அசாருதீன்(26) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸார் தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். ஆனால் நீதிபதி கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறியதால் கும்பகோணம் முதலாம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.