பாலேஸ்வரத்தை தொடர்ந்து பொழிச்சலூர்

பாலேஸ்வரத்தை தொடர்ந்து பொழிச்சலூர்

சென்னை பொழிச்சலூரில் குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த மலபார் கதோலிக்க சபைக்கு சொந்தமான புனித அல்போன்ஸா தேவாலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 12 கான்கிரீட் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு முதியவரின் சடலம் கொண்டு வரப்பட்டதையும் பின்னர் அந்த சடலம் வெளியே கொண்டு வரப்ப்டாததால் சந்தேகமடைந்த பொது மக்கள் இந்து அமைப்பினரை தொடர்பு கொண்டனர். 

இந்து அமைப்பினர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சோதனை செய்ய முயன்ற போது தேவாலயத்தில் இருந்த ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்ப்பையும் மீறி ஆய்வு செய்த அதிகார்கள் ஒரு அறையில் 12 கான்கிரீட் கல்லறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு கல்லறையில் மட்டும் மாலை போட்டு இருந்ததால் அதனை ஆய்வு செய்த போது செவ்வாய்க்கிழமை அன்று கொண்டு வரப்பட்ட முதியவரின் சடலம் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

முன்பு பாலேஸ்வரத்தில் இதே போல முதியோர் இல்லத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கல்லறைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.