பா.ஜ.க, பட்டியல் ஆர்.எஸ்.எஸ்., மகிழ்ச்சி

பா.ஜ.க, பட்டியல் ஆர்.எஸ்.எஸ்., மகிழ்ச்சி

பா.ஜ.,வில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 36 எம்.பி.,க்கள் 2 மத்திய அமைச்சர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து எடுத்த இந்த துணிச்சலான முடிவு ஆர்.எஸ்.எஸ்சுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மோடியின் இந்த முடிவால் கட்சிக்குள் புதிய முகங்கள் வந்துள்ளனர். பெங்களூருவில் 28 வயதே ஆன தேஜஸ்வி சூர்யா என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஊறியவர். மேலும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த 85 பேருக்கு எம்.பி., சீட் தரப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்து-க்கு திருப்தி தந்துள்ளது.

சீட் தரப்படாத எம்.பி.,க்கள் பற்றி அந்தந்த தொகுதி களில்ஆய்வு நடத்திய பிறகே கட்சி இந்த முடிவுக்கு வந்தது. இவர்களை மீண்டும் போட்டியில் நிறுத்தினால் பலத்த அடி தான் விழும் என பா.ஜ., அஞ்சியது.இந்த எம்.பி.,க்கள் பற்றி மத்திய உளவுத் துறை அறிக்கையையும் பெற்று மோடியே நேரடியாக ஆய்வு செய்தார். இது ஒரு எளிதான செயல் அல்ல.முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்ற மூத்த தலைவர் களுக்கு சீட் தராமல் இருந்ததற்கு, தலைமை வலுவாக இருந்தது தான் காரணம். 

ஆயினும் இந்த இரு தலைவர்களிடமும் பேசி காரியத்தை புரிய வைத்துவிட்டார் மோடி. மீண்டும்பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்,இவர்களுக்கு நல்ல பதவி அளிக்கப் படும் என தெரிகிறது.