பா.ஜ.க-வில் திக்விஜய் சிங்? ஆர்.எஸ்.எஸ்-க்கு திடீர் ஆதரவு?

பா.ஜ.க-வில் திக்விஜய் சிங்? ஆர்.எஸ்.எஸ்-க்கு திடீர் ஆதரவு?

மத்திய பிரதேசத்தில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை, மாநில, காங்., அரசு வாபஸ் பெற்றதை, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கண்டித்துள்ளார்.

மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு, பலஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை, 'வாபஸ்' பெறுவதாக, முதல்வர், கமல்நாத் அறிவித்தார்.  

ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை, திடீரென, 'வாபஸ்' பெற்றது தவறு. பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் தொடர, முதல்வர் கமல்நாத், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும என்று திக் விஜய்சிங் கூறினார்.

பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து, மாநில எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, கோபால் பார்கவ் கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது தாக்குதல் நடத்த, காங்., சதி திட்டம் தீட்டி உள்ளது,'' என்றார்.