பிகானர் நில மோசடி ஒரு குடும்ப தொகுப்பு - ஸ்மிருதி இராணி அதிரடி

பிகானர் நில மோசடி ஒரு குடும்ப தொகுப்பு - ஸ்மிருதி இராணி அதிரடி

 பிகானர் நில மோசடி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது மத்திய உள்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பல புது தகவல்களை புதுதில்லியில் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கூறியுள்ளார்.

"காங்கிரஸ் அரசில் ஊழல் என்பது ஒரு பரிசு". ராகுல் காந்தியின் தலைமையிலான குடும்ப அரசியலைப் பற்றி இராணி பேசியதாவது, கடந்த 24 மணி நேரத்தில் செய்தி வாயிலாக வந்த உண்மைகள், காந்தி-வத்ரா குடும்பம் "பரிவரிக் பாரஸ்தாச்சர்" பற்றி விவரிக்கிறது. 

இந்த செய்தி வாயிலாக வந்த உண்மைகள் ராகுல் காந்தி மற்றும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோருக்கு இடையேயான உறவை தெளிவாக முன்வைத்துள்ளது என்று கூறினார்.

தங்கள் சொந்த குடும்பத்தின் நலனுக்காக வேலை செய்யும் காந்தியை குற்றஞ்சாட்டினார். அவரது தனிப்பட்ட வணிக நலன்களில், அவரது தனிப்பட்ட குடும்ப நலன்களில் மட்டுமே அவருடைய நாட்டம் இருக்கிறது என்று அவர் கூறினார். 

பிரியங்கா காந்தி வதேராவின் பெயரும் நில மோசடி ஆவணங்களில் உள்ளதாகவும், "பிகானர் நில ஊழல் ஒரு குடும்ப தொகுப்பு," எனவும் கூறினார். 

ரபேல் ஒப்பந்தம் பற்றி பேசுகையில், "ரஃபேல் கோப்புகளின் தொடர்பில் சஞ்சய் பண்டாரியின் ஈடுபாடு கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையிலிருந்து ஆவணங்கள் எவ்வாறு திருடப்படுகின்றன மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான தகவல்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன. " என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

"சஞ்சய் பண்டாரிக்கும் மற்றும் ராபர்ட் வத்ராவிற்கும் இடையேயான உறவு லண்டனில் உள்ள பினாமி சொத்துக்கள் தொடர்புபடுத்தியது," என்பதையும் கூறினார்.