"பிகானீர் நில முறைகேடு வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 9 மணி நேரம் விசாரணை"

"பிகானீர் நில முறைகேடு வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 9 மணி நேரம் விசாரணை"

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வதேரா செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அவரது தாயார் மௌரீனும் விசாரணைக்கு ஆஜரானார். ராபர்ட் வதேராவிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவர் புதன்கிழமை மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மோடி மீது குற்றச்சாட்டு:  முன்னதாக, இந்த வழக்கில் 3 முறை வதேராவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், அவர் மூன்று முறையும் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவர் தற்போது ஆஜராகியுள்ளார்.இதனிடையே, முகநூலில் ராபர்ட் வதேரா வெளியிட்ட பதிவில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும், தன்னை மட்டுமன்றி தனது தாயாரையும் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் 3 முறை வதேராவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், அவர் மூன்று முறையும் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவர் தற்போது ஆஜராகியுள்ளார்.