பிஜேடி முன்னாள் எம்.பி. பாஜகவில் இணைந்தார்

பிஜேடி முன்னாள் எம்.பி. பாஜகவில் இணைந்தார்

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, வைஜயந்த் பாண்டா சந்தித்தார். இதையடுத்து, பாஜகவில் அவர் முறைப்படி இணைந்தார். ஒடிஸாவை சேர்ந்த முன்னணி ஊடகத்தின் உரிமையாளரான வைஜயந்த் பாண்டா, பிஜு ஜனதா தளம் கட்சியில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு அடுத்து செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். பாஜகவுடன் நட்பு பாராட்டியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் வைஜயந்த் பாண்டா ராஜிநாமா செய்தார்.