பினாமி சொத்துகளை  முடக்கியதால் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள்

பினாமி சொத்துகளை முடக்கியதால் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள்

பினாமி சொத்துகளை முடக்கி, கருப்புப் பணத்தை பறிமுதல் செய்ததால் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்வதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். கடந்த 25 மாதங்களில் பினாமி சொத்துகள் மீட்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறிந்து மூடப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கோடி சொத்துகளை அபகரித்த இடைத் தரகர்களும் ஒழிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடியின் திட்டங்களால் மிரண்டு போன எதிர்க்கட்சிகள், அவரை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்கின்றன. ஆனால், உலக அரங்கில் இந்தியா நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்காகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, பாஜக ஆட்சி மூலம் வளமான இந்தியாவை ஏற்படுத்துவதற்காகவும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.