பியூஷ் மனுஷ் பாஜக அலுவலகத்திற்கு சென்ற காரணம் என்ன..?

பியூஷ் மனுஷ் பாஜக அலுவலகத்திற்கு சென்ற காரணம் என்ன..?

மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவால் கலங்கி போனது திமுக. அவர் மீது திமுக புகார் தெரிவிக்க, இணையத்தில் அவருக்கு கிடைத்த ஆதரவை பார்த்து மிரண்டு போனது அக்கட்சி. மக்களை திசை திருப்ப அவர்களுக்கு ஒரு பலி ஆடு தேவைப்பட்டது. அந்த ஆடு தான் பியூஷ் மனுஷ். இயற்கை ஆர்வலர் என்கிற பெயரில் இந்த பியூஷ் பலரை மிரட்டி காசு பார்த்துள்ளார்.

போதீசை மிரட்டி பணம் பறித்தது, சேலம் ஏரியை காக்கிறேன் என்று பணம் வசூலித்து ஏமாற்றியது, உடன் பணி புரிந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, சட்டவிரோத பணபரிமாற்றம் என்று இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் ஆதாரத்துடன் உள்ளன. இவர் மீதான பணபரிமாற்ற புகார்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன, எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் தவித்து வந்தார் பியூஷ்.

மறுபக்கம் திமுகவும் பரிதவித்து வந்தது.  எனவே பியூஷ் மனுஷை பயன்படுத்திக்கொள்ள திமுக நினைத்தது. எப்படியாவது தப்பினால் போதும் என்கிற நிலையில் இருந்த பியூஷ் , திமுக திட்டத்திற்கு சம்மதித்தார். இந்த பியூஸ் மிஷினரிகள் கைக்கூலி என்பதும் ஏற்கனவே தெரிந்த விஷயம்

பொருளாதார சிக்கல், காஷ்மீர் குறித்து இவருக்கு இருக்கும் மீடியா பலத்திற்கு, எந்த டீவியில் போனாலும் 1 மணி நேரம் விவாதத்தில் கலந்துகொள்ள முடியும். விவாதத்திற்கு வரும் பாஜக செய்தி தொடர்பாளருடன் பேசலாமே. சேலம் பாஜக அலுவலகத்தில் கேட்டால் எப்படி…

அங்கு போனால் நிச்சயம் பிரச்சனை வரும், மாரிதாஸ் பிரச்சனை அமுங்கும், தம் மீதான பிற வழக்குகள் வந்தால் பழி வாங்கும் நடவடிக்கை என்று மக்களை ஏமாற்றலாம் என திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றினர்.பியூஷ் தாக்கப்பட்டதற்கு திமுக ஏன் ஓடி வரவேண்டும்? இதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலினும், உதயநிதியும் பொங்குகிறார்கள். இதை வைத்தே திமுக - பியூஷ் சதியை அறிந்துக்கொள்ள முடியும்