பிரதமரின் தீபாவளி கொண்டாட்டம்

பிரதமரின் தீபாவளி கொண்டாட்டம்

எப்போதும் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்சில் என்ற இடத்தில் ராணுவ வீரர்களோடும், இந்திய திபெத்திய எல்லை படை வீரர்களோடும் அவர் தீபாவளியை கொண்டாடினார். முன்னதாக அவர் கேதார்நாத் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அப்போது அவரை காண வந்திருந்த உள்ளூர் மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர், ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் அவர்களிடம் பேசும் போது,"தீபாவளி என்பது ஒளியின் திருவிழா. அது நன்மை என்னும் ஒளியை ஏற்றிவைத்து தீமை என்னும் இருளை விரட்டுகிறது. பனி சூழ்ந்த அபாயகரமான மலை சிகரங்களில் நமது வீரர்கள் ஆற்றும் சீரிய பணியினால் தான் நாட்டு மக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்கிறார்கள்." என்று கூறினார்.

மேலும், தான் குஜராத் மாநில முதல்வராக இருந்த போதிலிருந்தே ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதையும், தனது கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் கலந்துரையாடியதையும் அப்போது அவர் நினைவு கூர்ந்தார்.