பிரதமரின் பரிசுகள் ஏலம்

பிரதமரின் பரிசுகள் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.  சுமார்  1800 பொருட்கள் இதற்காக தில்லியில் உள்ள நேஷனல் கேலரி பார் மாடர்ன் ஆர்ட் என்ற இடத்தில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று கண்காட்சி துவங்கியதுமே பல பொருட்கள் விற்று தீர்ந்து விட்டன. எனினும், இன்றும் ஏலம் நடைபெறுகிறது.   அதிலிருந்து பெறப்படும் தொகை கங்கை நதி தூய்மை படுத்தும் பணிக்கு தரப்பட இருக்கிறது.