பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் ஏழைகளிடம் பணம் பிடுங்கும் கேரள கம்யூனிஸ்டுகள்

பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் ஏழைகளிடம் பணம் பிடுங்கும் கேரள கம்யூனிஸ்டுகள்

பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் கேரள கம்யூனிஸ்டு அரசு முறைகேடு செய்து வருவதாக மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு மற்றும் தேவிகுளம் பஞ்சாயத்துகளில் வீடு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் விதமாக அம்மாநில அரசு பிரதமரின் எல்லோருக்கும் வீடு திட்டத்தை துவங்கியது. இந்தநிலையில்,இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்கி தருவதாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சில நபர்கள் தொழிலாளர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுத்துள்ளது.

எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தின் பட்டியலில் பலருடைய பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கு பொதுமக்கள் மனு அளிப்பதில் குழப்பம் ஏற்பட்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் வீடு வாங்கி தருவதாக கூறி தொழிலாளர்களிடம் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை பணம் பறித்து வருவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பணம் இருப்பவர்களுக்குத்தான் கம்யூனிஸ்டுகள் வீடுகள் ஒதுக்குவதாகவும், ஏழை மக்களுக்கான திட்டம், என்றாலும் பணம் இல்லை என்றால் எதுவும் நடப்பதில்லை எனவும், கூறியுள்ளனர்.