பிரதமருக்கு பிலிப் கோட்லர் புகழாரம்

பிரதமருக்கு பிலிப் கோட்லர் புகழாரம்

சிறந்த தலைமை பண்பிற்காகவும் இந்திய முன்னேற்றத்திற்கான  தன்னலமற்ற சேவைக்காகவும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  'பிலிப் கோட்லர் தலைமை விருது'  திங்கட்கிழமை வழங்கப்பட்டது. 

உலக புகழ் பெற்ற மார்கெடிங் மேதை பிலிப் கோட்லர் சிறந்த தலைமைக்கான விருது பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 87 வயதாகும் பிலிப் கோட்லர் புகழ் பெற்ற கெல்லாக் ஸ்கூல் ஆப் மானேஜ்மேண்டில் பேராசிரியராக இருக்கிறார். பிரதமருக்கு அவர் டிவிட்டர் மூலம் விடுத்துள்ள செய்தியில்,  "நரேந்திர மோடியின் முயற்சியினால், இந்தியா பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழிற்நுட்பத்தில் அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் அதனை பற்றிய உலகின் பார்வையும் உயர்ந்துள்ளது. WORLD MARKETING SUMMIT (WMS)ன் வல்லுநர் குழு பரிசீலித்த பல தலைவர்களின் பெயர்களில் நரேந்திர மோடியின் பெயரை தேர்ந்தெடுத்தது. அவருக்கு இந்த விருது கிடைத்தது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் பெருமையாகும். ஆனால், இந்தியாவிலேயே பலர் இதை விமர்சிப்பது வருத்தத்துக்குறியது." என்று கூறியுள்ளார்.