பிரதமர் நரேந்திர மோடியின் நேர்காணல் - நடிகர் அக்ஷய் குமார்

பிரதமர் நரேந்திர மோடியின் நேர்காணல் - நடிகர் அக்ஷய் குமார்

முதலில் அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியை விட நரேந்திர மோடியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி அக்ஷய் குமார் பேட்டியை தொடங்கினார்.

அக்ஷய் குமார் : பிரதமர் ஆக வேண்டும் என நினைத்ததுண்டா?

பிரதமர் பதவிக்கு வருவேண்டுமென நான் நினைத்ததில்லை, நான் ஒரு நல்ல வேலையைப் பெற்றிருந்தால்கூட என் தாயார் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அவர் இனிப்புகளை விநியோகித்திருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்.

அக்ஷய் குமார் : நரேந்திர மோடியின் கோபத்தை கட்டுபடுத்தும் மந்திரம் என்ன?

நான் விரும்பாத ஒன்றை செய்திருந்தால், நான் தனியாக உட்கார்ந்து ஒரு காகிதத்தில் எல்லாவற்றையும் எழுதுவேன். நான் என்ன செய்தேன், ஏன் நான் அதை செய்தேன் என்று எழுதுவேன். பின்னர் நான் அந்த காகிதத்தை கிழித்துவிட்டு தூர எறிந்துவிடுவேன். அப்போது எனது கோபம் குறைந்துவிடும் என்று கூறினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சிகளில் எனக்கு நண்பர்கள் உள்ளனர் என்று கூறினார். அவர்களை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து  அவர்களின் மதிய உணவில் கலந்துகொள்வேன். நாங்கள் ஒரு குடும்பம் போல் இணைந்துள்ளோம் நீங்கள் வெளியில் பார்க்காத வகையில். ஏனென்றால் அவை தேர்தலில் தீங்கு விளைவிக்கும். மம்தா திதி எனக்கு வருடத்திற்கு ஒரு குர்தா -வை அனுப்புவார் மற்றும் "பெங்காலி இனிப்புகளை" அனுப்புவார் .

"கல்வியாளர்கள், 'அலாதீன் கா சிராக்கைப் பற்றி எதிர்கால தலைமுறைக்குத் தெரிவிக்கக்கூடாது, கடினமாக உழைக்க அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.