பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் - சௌராஷ்டிர சபை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் - சௌராஷ்டிர சபை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கு தங்கள் சமூகத்தின் ஆதரவை அளிப்பதாக சௌராஷ்டிர சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஸௌராஷ்ட்ர மத்ய சபை உயர்மட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நேற்று (மார்ச் 22) காலை சென்னையில் உள்ள மத்ய சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானமாகஇன்றைய அரசியல் சூழலில்,நம் சௌராஷ்ட்ர சமூகத்திற்கு நல்லதொரு மதிப்பும், கௌரவமும் ஏற்படுத்திக் கொடுத்ததுடன், நமது மத்ய சபையின் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் 3 முறை சமூக மேம்பாடு குறித்து கலந்தாலோசிக்க உடனடியாக சந்திக்க அனுமதி வழங்கிய நமது பாரதப் பிரதமர் மக்கள் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க வேண்டி நமது மத்ய சபை, சமூக மக்கள் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக பா... வேட்பாளர்களுக்கும்  தமிழகத்தில் ...தி.மு. , பா... கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை செயல்படுத்தி & நடைமுறைப்படுத்த மத்யஸபை தலைவர் Dr.S.R. ஸ்ரீராம் சேகர்  தலைமையில் குழு அமைத்து அக் குழுவின் தலைமை பொறுப்பாளராக மத்யசபை முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் R.B.R. ராம சுப்பிரமணியன் அவர்களும் மற்றும் பொறுப்பாளர்களாக உப தலைவர் வழக்கறிஞர் T. சேஷாத்திரி, பெரியகுளம் பொதுச் செயலாளர் N.S.R.சாந்தாராம், சென்னைஉப தலைவர் S.V.ராமமூர்த்தி, திண்டுக்கல் உப தலைவர் T.S.ரவிசன், திருப்பூர்செயலர் R.S.ஜனார்த்தணன், சென்னை மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் 
தமிழக முதல்வர் & துணை முதல்வர் மற்றும் பா... மாநில நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கி ஆவன செய்வது என தீர்மானிக்கப்பட்டது.