பிரதம மந்திரி அலுவலகத்தின் தலையீட்டால் கேரள மாற்றுத்திறனாளி மாணவனின் கல்வி போராட்டம் முடிவுக்கு வந்தது!.

பிரதம மந்திரி அலுவலகத்தின் தலையீட்டால் கேரள மாற்றுத்திறனாளி மாணவனின் கல்வி போராட்டம் முடிவுக்கு வந்தது!.

கேரளாவைச் சேர்ந்த முகமது ஆசிம் என்ற மாணவன் பிறக்கும்போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்துள்ளார். அவருக்கு கல்வி கற்க வேண்டும் என்று மிகவும் விருப்பம்.
கோழிக்கோடு மாவட்டத்தில் ஓமஞ்செரி பஞ்சாயத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர வேண்டுமென்று முயற்சி செய்துள்ளார் அதில் அவருக்கு சில சிக்கல்கள் இருந்துள்ளது. இதை அறிந்த பிரதம மந்திரியின் அலுவலகம், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை மாநில கல்வித் துறையிடம் நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்துவைக்க அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவர் தற்பொழுது பள்ளியில் சேர்க்கப்பட்டு மகிழ்ச்சியாக படித்து வருகிறார்.