பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

"தேவேந்திர குல வேளாளரை தவறுதலாக பட்டியல் இனத்தில் சேர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடவேண்டும்."  என்ற  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

"தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்தில் சேர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்ற  கோரிக்கையை வலியிருத்தி  புதிய தமிழகம் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிட்டிஷ்  துணை தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினார்.