பிறந்த நாள் கொண்டாடும் "சேவா பாரதி"

பிறந்த நாள் கொண்டாடும் "சேவா பாரதி"

சமூக சேவையாளர் என்றாளே வரலாற்று புத்தகங்களை புரட்டி தேடும் மனிதர்களுக்கு மத்தியில் சேவையாளர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள சேவாபாரதி அமைப்பை 9.9.1999 ம் ஆண்டு சென்னையில் ஆர்.எஸ்.எஸ் துணையோடு சுந்தரலக்ஷ்மனன், ஏலகிரி ஆகியோரால் துவங்கபட்டது. பஞ்ச கார்ய (கல்வி, மருத்துவம், சமூகநலன், பேரிடர் மேலாண்மை, சுய உதவிக்குழு) எண்ணும் கொள்கை அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பினால் பயனடைந்தோர் ஏராளம் .

நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக சென்னையில் தினமும் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருதல், பெண்களுக்கு சுய உதவிக்குழு மூலமாக மறுவாழ்வளித்தல், இரத்த தான முகாம் மூலமாக ஓர் ஆண்டில் மட்டும் 7,715 யூனிட் ரத்ததானம் வழங்கியது, 2004 சுனாமியின் போது 3500 தன்னார்வலர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தி அழுகிய நிலையில் இருந்த சுமார் 2500 மனித உடல்களை தக்க மரியாதையோடு அடக்கம் செய்தது, சென்னை வெள்ளத்தின் போது சுமார் 1,75,250 வீடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் விநியோகித்தது என ஒரு புத்தகமே போடும் அளவிற்கு சேவைகளை செய்துவரும் இந்த அமைப்பு தனது 20 வது ஆண்டுவிழாவினை இன்று கொண்டாடுகிறது.