பிளாஸ்டிக் கவர்!... நீ காலி !

பிளாஸ்டிக் கவர்!... நீ காலி !

ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், கைப்பற்றவும், பயன்படுத்துவோர்க்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், பல மாவட்டங்களில் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கடைகளை நேரடியாக ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றியுள்ளார் மேலும் 9 நிறுவனங்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்துள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக பின்பற்றப்படுகிறது. வணிக நிறுவனங்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்து விட்டால் பத்தாயிரம் ரூபாயும் அதிகாரிகள் கண்டுபிடித்தால் 1 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் மிரண்டு போயுள்ளனர் கடை உரிமையாளர்கள். காஞ்சீபுரத்தில் 2 கடைகளில் 1 டன் அளவிற்கு தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதே போல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.