பீகார் பெண்ணுக்கு "பேபி" கொடுத்த கம்யூனிஸ்ட் மகன்

பீகார் பெண்ணுக்கு "பேபி" கொடுத்த கம்யூனிஸ்ட் மகன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில பொதுச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பிநோத் பாலகிருஷ்ணன் மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து ஒரு குழந்தைக்கும் தாய் ஆக்கிவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். ஏற்கனவே அரபிகள் இவர் அவர்களை ஏமாற்றியதாக ஒரு வழக்கு நிறுவையில் உள்ளது. 

கேரளா அரசு ஊழியர்களுக்கு மாத மாதம் சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ மாதாமாதம் ஒரு புகார் வினோத் பாலகிருஷ்ணன் மீது வந்தடைகிறது. ஏற்கனவே மண்ணைத் தோண்டிப் புதைத்து விட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மகன் இன்று பால் ஊற்றி விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.