புதிதாக வீடு வாங்குவோருக்கு ஒரு நற்செய்தி

புதிதாக வீடு வாங்குவோருக்கு ஒரு நற்செய்தி

கட்டுமான நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கட்டுமான நிலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப் படுகிறது. அதே போல், மலிவு விலை வீடுகளுக்கான வரி விகிதம், 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைக்கப் படுகிறது. 

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு அல்லது சொந்த வீடு வாங்குவோருக்கு இந்த வரி குறைப்பு உபயோகமானதாக இருக்கும். இந்த வரி குறைப்பு, ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.