புதிய உயரத்தை தொட்ட அருணிமா சின்ஹா

புதிய உயரத்தை தொட்ட அருணிமா சின்ஹா

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலை சிகரமான வின்சன் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் அருணிமா சின்ஹா. இந்த சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையோடு முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அருணிமா. இவர் 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப்படைத்துள்ளார்.

அருணிமா சின்ஹாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனேகா காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தமது வாழ்த்து செய்தியில், "வெற்றியின் புதிய உயரங்களை தொட்டமைக்கு வாழ்த்துக்கள். தமது கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் தனித்துவமாக விளங்கும்  இவர் இந்தியாவின் பெருமை". என்று குறிப்பிட்டுள்ளார்.