புதுவை பாஜக வினரின் போராட்டம் வெற்றி

புதுவை பாஜக வினரின் போராட்டம் வெற்றி

அரசு எத்தனை நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தாலும் அவற்றை அவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் அதிகாரிகளே. ஆனால், பல இடங்களில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேராதது மட்டுமல்லாமல் அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்று 'முத்ரா வங்கிக்கடன்' வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு தொழிற் தொடங்க வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இதனால், வேலையில்லா திண்டாட்டம் நீக்கப்படுவதோடு, இளைஞர்கள் தொழிர்முனைவோர்களாகவும் உருவாகிறார்கள். 

புதுச்சேரி உழவக்கரையில் உள்ள  பாரத  ஸ்டேட் வங்கியில் இந்த கடனுக்காக அணுகியவர்களை வங்கி அதிகாரிகள் கடன் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனை அறிந்த புதுச்சேரி பாஜகவினர்  உழவக்கரை மாவட்ட பாஜக தலைவர் சிவானந்தம் தலைமையில்  வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாட்டஞ்சாவடி தொகுதி தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுப்புராஜ், கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜகவினரின் இந்த போராட்டத்தை அடுத்து வங்கி அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். 

இனி இது போல் நடக்காது என்றும், வங்கி கடனுக்காக அணுகுபவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில்  பாஜக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும்  கலந்து கொண்டனர்.