புது ஒதுக்கீடு - ஸ்டாலின் எதிர்ப்பு

புது ஒதுக்கீடு - ஸ்டாலின் எதிர்ப்பு

அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (அதாவது ஜாதி ரீதியில் உயர் குடியில் பிறந்தவர்களுக்கு) 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை இன்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,"பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்று கூறியுள்ளார்..

அதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார்,"பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அது குறித்து அறிவிப்பு வரும் போது தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்." என்று கூறினார்.