புத்தக நந்த(வ)னம்

புத்தக நந்த(வ)னம்

Guide to middle class senior citizens visiting 'BOOK FAIR'


தகுதி:


போன ஆண்டு வாங்கின புத்தகங்களை படித்து முடித்திருப்பவர்கள்

அனைவரும் வரலாம். பத்து ரூபாதானே சத்தே  காலாற  நடந்துட்டு

வரலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

வெறும் ஸ்லோக புத்தகங்கள் வாங்க மயிலை கிரி ட்ரேடர்ஸ்

எதேஷ்டம்.


இடம்:

YMCA மைதானம் வாசலிலிருந்து சந்தை சுமார் 300 மீட்டர்

உள்ளே வரணும்


எனவே


Those who come by cabs:

சேருமிடம் YMCA pavilion என்று குறிப்பிடவும்.


Those who come by autos:

சந்தைக்கு உள்ளே இறக்கி விடவேண்டும் என்று ஓட்டுனரிடம்

சொல்லி சத்தியம் வாங்கி கொள்ளவும்.இல்லையென்றால்

வெளியில் நிர்மலா ஜி போல சண்டை போட வேண்டியிருக்கும்


Those who come by Metro :

இறங்குமிடம் நந்தனம் ஸ்டேஷன்.

YMCA end என்று கேட்டு தட்டுத்தடுமாறி வெளியே வந்து உடனே

ஒரு ஆட்டோ பிடித்து சந்தைக்கு உள்ளே இறக்கி விடவேண்டும்

என்று ஓட்டுனரிடம் சொல்லி  சத்தியம்  வாங்கி கொள்ளவும்.

உங்களுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் முப்பது ரூபாய்க்கு

படியலாம்.அறுபது ரூபா கொடுத்தால் உள்ளே பத்திரமாக இறக்கி

விட்டு டிக்கட்  வாங்கி  கொடுத்து  விட்டு  போவார்  உங்க 

சௌகரியம்!.   ஸ்டேஷனிலிருந்து  பொடி  நடை  என்பவரை 

நம்ப வேண்டாம் பொடி=0.7kms


Those who wish to come by MTC :

சைதை முனையிலிருந்து :

வேண்டாம்.சந்தைக்கு நேர் எதிரே ஸ்டாப்.

குறுக்கே பெர்லின் சுவர்;  பாதசாரிகள் பாதை கடக்கும் இடம் கிடையாது.

ஆட்டோ நூறு ரூபா கேட்பர்


சைதை நோக்கி வரும் பயணிகள் :

ஹவுசிங் போர்ட் நிறுத்தம் என்று கேட்கவும். நீல போர்ட் பஸ் நிற்காது

பச்சை போர்ட் ஓட்டுநர் மூடை பொறுத்து நிற்கும்.

நடக்கவேண்டிய தூரம் 350மீ


எடுத்துக்கொண்டு போகவேண்டிய பொருட்கள்:

பனிக்குல்லாய், சிறிது நொறுக்குத்தீனி, குடிநீர்,  பிளாஸ்கில் காபி,

மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை(அனைத்தும் pre பிச்சி போட்டிfied)

அல்லது"இது ஒன்றும் எடுத்துக்கொண்டு போகமாட்டேன் அங்கேயே

வாங்கி சாப்பிடுவேன்!" என்பவர்கள் நாட்டுப்பெண்ணிடம் கேட்டு கையில்

300 ரூபா சில்லறையாக.


போகும் நாள் நேரம்


சனி ஞாயிறு மற்ற விடுமுறை தினங்கள் :

அங்குள்ள மொத்த புத்தகங்களை விட அதிக வாசகர்கள்

இருப்பார்கள் போக வேண்டாம்


வார நாட்கள்:

மதியம் இரண்டுமணிக்கு உள்ளே நுழைவது உசிதம்.

மாலை ஏழுமணிக்கு வெளியேறலாம்.


முழுவதும் சுற்றி பார்க்க ஆகும் நேரம்..

ஆறு முதல் அறுபது வரை (மணி) உங்க ஆர்வத்தை,சக்தியை,

மற்றும் fasting PP அளவுகளை பொறுத்து


ஓய்வெடுக்க: எங்கேயாவது அதிர்ஷ்டவசமாக காலி சேர் தென்படும்

இடங்கள்.


எச்சரிக்கை : ஆங்காங்கே தரை விரிப்பு தடுக்கி விடும்.


ஆர்வக்கோளாறில் கனமான புத்தகங்கள் வாங்க வேண்டாம்.

ஒருவேளை  படிக்க  முடிந்தாலும் தூக்கிக்கொண்டு அலைவது

மிகவும் கஷ்டம்.


- ரங்கநாதன் கணேஷ்