புத்தாண்டு கொண்டாட்டம் - போலீஸ் குவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம் - போலீஸ் குவிப்பு

ஆங்கில புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இளைஞர்கள் நள்ளிரவு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மது, போதை பொருட்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதும், இதனால் விபத்துகள் ஏற்படுவதும் அதிகமாகிவிட்டன. மேலும், ஆங்கிலப்புத்தாண்டு நள்ளிரவில் கொண்டாடப்படுவதால் குற்ற செயல்களும் அதிகமாகிவிட்டன. 

நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி இன்று சென்னை நகரம் முழுவதும் கேளிககைகளும் கொண்டாட்டங்களும் துவங்கிவிட்டன. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகளான கடற்கரை, நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள விடுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாபலிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கேளிக்கை விடுதிகள் நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்தகூடாது என்று தடை விதிக்கப்படுள்ளது. நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.