புத்தாண்டு பலி - 8

புத்தாண்டு பலி - 8

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கில புத்தாண்டு அன்று  நள்ளிரவில் மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளானவர்கள் பலர். மது அருந்தி விட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டி அப்பாவி பாதசாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவமும் நடந்துள்ளது. 

மது அருந்தினால் போலீஸார் ஆல்ககால் டிடெக்டர் கருவி மூலம் கண்டுபிடித்து விடுகின்றனர் என்று கஞ்சா முதலிய போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் கேளிக்கைக்கு பல உயிர்கள் பலியாகும் பரிதாப நிலை என்று மாறும் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். 

கலாசாரத்திற்காக இல்லாவிட்டாலும், தங்கள் உடல் நிலையை பாதுகாத்துக்கொள்ளவும், உயிரிழப்புகளை தவிர்க்கவுமாவது தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.