புயல் நிவாரண பணிகளுக்கு உதவுங்கள்

புயல் நிவாரண பணிகளுக்கு உதவுங்கள்

சேவாபாரதி பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். பல்வேறு  சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு இப்போது 'கஜா' புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் பொது மக்களையும் பங்கு கொண்டு உதவுமாறு சேவாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து  சேவாபாரதி தென் தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
 
    நவம்பர் 15 ம் தேதி அடித்த கஜா புயல் யாருமே எதிர்பார்க்காத வகையில் நாகை ,திருவாரூர் ,தஞ்சாவூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை  புரட்டிப்போட்டது .ஏராளமான வீடுகள் ,இலட்ச கணக்கான மரங்கள்,நூற்றுக்கனக்கான கால்நடைகள்,ஆகியவை பாதிக்கப்பட்டன .தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் அனைவருமே முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் . அவர்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டுமென்றால் குறைந்தபட்சம் வீடு மேற்கூரைக்கு தேவையான தார்ப்பாய், உணவுக்கான பொருட்கள் ,பாய் ,போர்வை,மெழுகுவர்த்தி ,தீப்பெட்டி போன்றவை தேவைப்படுகிறது .

       சேவாபாரதி தென் தமிழ்நாடு   திருவாரூர் ,தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை ,புதுக்கோட்டை,வேதாரண்யம் ,திருத்துறைப்பூண்டி ,ஆகிய இடங்களில் முகாம்  அமைத்து 600 க்கும் மேற்பட்ட சேவாபாரதி தொண்டர்கள் நேரடி களப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள் .அத்துடன் தேவையான பொருட்கள் ,மருத்துவ உதவிகள் ,மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .இப்பணிகள் தொடர்ந்து செய்வதற்காக தங்களை போன்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் பொருளாகவோ ,நிதியாகவோ வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

உதவி செய்ய வேண்டிய முகவரி :
       சேவாபாரதி தென் தமிழ்நாடு 
       பதிவு எண் :339/11 
      State Bank of India  (08181)
      Melachunthamani (trichy)
      IFS Code SBIN0008181
      Account No. : 31841094583 
      contact Nos. : 9442080925 ,7598925756

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.