புயல் நிவாரண பொருட்களுக்கு  விமானத்தில் சலுகை

புயல் நிவாரண பொருட்களுக்கு விமானத்தில் சலுகை

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவராண பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப கட்டணம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப கட்டணம் கிடையாது என்று ரயில்வே வாரியமும் அறிவித்துள்ளது. பொருட்களின் மீது 'கஜா புயல் நிவராண பொருட்கள்' என்று குறிப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.