புறப்படத் தயாராக உள்ளது ஜிசாட் 7ஏ

புறப்படத் தயாராக உள்ளது ஜிசாட் 7ஏ

இந்தியாவின் அதி நவீன தொலை தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 7ஏ இன்று மாலை நான்கு மணி பத்து நிமிடத்திற்கு ஜி.எஸ்.எல்.வி.எப் 11 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.  2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்க்கைக்கோள் இந்தியாவின் க்யூ பாண்ட் அலைவரிசையில் தகவல் தொடர்புகளை வழங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.குறிப்பாக பாதுகாப்புத்துறையில் இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.