புல்வாமாவில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் அல்ல, விபத்து - திக்விஜய் சிங்

புல்வாமாவில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் அல்ல, விபத்து - திக்விஜய் சிங்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று திக்விஜய் சிங் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் "ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; அதுவொரு விபத்து''  என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "புல்வாமாவில் நடைபெற்றது விபத்து; புல்வாமா சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. இது இந்திய அரசின் நம்பகத்தன்மை மீது கேள்வியை எழுப்புகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

அவரது இந்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. சுட்டுரையில் திக்விஜய் சிங்குக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தனது கருத்தை திக்விஜய் சிங் வாபஸ் பெற்றார். அவர் வெளியிட்ட பதிவில், "புல்வாமாவில் நடைபெற்றது பயங்கரவாதத் தாக்குதல்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை, முக்கிய கேள்விகளுக்கு ராணுவம் பதிலளிக்காமல் தவிர்க்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.