புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்த பயங்கரவாதி காஸி ரஷீத் மற்றும் கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பதும், ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.