புல்வாமா தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்

புல்வாமா தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

சூர்யா : புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது.

விக்னேஷ் சிவன் : நம் வீரர்கள் மீது நடந்த தாக்குதலை பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபமும், கவலையும் அடைந்துள்ளார்.

அக்ஷய் குமார் : புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து நடிகர் அக்ஷய் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்கிறார்.

டாப்ஸி:  நம் வீரர்கள் வீரமரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சனைக்கு என் வாழ்நாளிலேயே தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

ஹன்சிகா : புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். வீர மரணம் அடைந்த நம் வீரர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஹன்சிகா.

ஜெயம் ரவி : எங்கள் ஜவான்கள் மீது நடத்திய  தாக்குதல் கொடூரமான செயல். அது கோழைத்தனம் ஆகும்

விஷால் : நமது நாட்டிற்கு மதிப்புமிக்க உயிர்களை தியாகம் செய்வதற்கு பல துணிச்சலான வீரர்களை பார்க்கும் வகையில், பயங்கரவாதிகளின் இத்தாக்குதல் கோழைத்தனமான செயல்.

அதிதி ராவ் : நம்பமுடியவில்லை, நம்பமுடியாதது, நம்மில்  ஏன் இப்படிப்பட்ட மனிதர்கள் சில நேரங்களில் இருக்க முடியும் ?

பிரகாஷ் ராஜ் : அதிர்ச்சி, வருத்தப்பட்டேன், @புல்வாமா தாக்குதல். நமது வீரர்களின் குடும்பங்களுக்காக நாம்தான் நிற்க வேண்டும்.  

ராதிகா சரத்குமார் : அதிர்ச்சியாக உள்ளது @புல்வாமா தாக்ககுதல், எனது ஆழ்ந்த இரங்கலை நமது வீரர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துகொள்கிறேன்.

பிரபு தேவா : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது. எங்கள் துணிச்சலான ஜவான்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பலர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களது இரங்கல் மற்றும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.