புல்வாமா தாக்குதல் - சதித் திட்டம் திட்டியவர் சுட்டுக் கொலை

புல்வாமா தாக்குதல் - சதித் திட்டம் திட்டியவர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தின் திரால் பகுதியில் உள்ள பிங்கிலிஷ் என்ற இடத்துக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதையறிந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், முதாசிர் முகமது கானும், மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். 

துப்பாக்கிச் சண்டையில் இருவர் உயிரிழந்தனர். அவர்களில், முதாசிர் கானின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர். மற்றொருவர் புல்வாமா தாக்குதலுக்கு வாகனம் கொடுத்து உதவிய சஜத் பட்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், அவரை அடையாளம் காண முடியாததால், அவரது உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுத்து விட்டனர். அதைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்துவதற்கு சதித் திட்டம் தீட்டியது, புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியைச் சேர்ந்த முதாசிர் கான் என்பது விசாரணையில் தெரியவந்தது.