புல்வாமா தாக்குதல் - தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் கண்டனம்

புல்வாமா தாக்குதல் - தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் கண்டனம்

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில்லை. இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்கா இருக்கும். வளர்ச்சி, அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதத்துக்கு எந்தவொரு நாட்டிலும் இடமில்லை என்று கூறினார்.