பூட்டானில் ரூபே கார்டுகள்

பூட்டானில் ரூபே கார்டுகள்

இந்தியாவின் 'ரூபே' கார்டுகள் விரைவில் பூட்டானிலும் அறிமுகப்படுத்தபட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மூன்று நாட்கள்  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் லோட்டே திஷெரீங்க் உடன் நடத்திய பேச்சு வார்த்தைகளுக்கு பின் அவர் இவ்வாறு கூறினார். 

பூட்டான் தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற இந்தியா உதவிடும் என்றும் அவர் கூறினார். இதற்காக இந்தியா 4,500 கோடி ரூபாய் பூட்டானுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். 

முன்னதாக, காந்தியடிகளின் நினைவிடத்தில்  பூட்டான் பிரதமர் லோட்டே திஷெரீங்க் அஞ்சலி செலுத்தினார். அவரை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். 

பூட்டான் பிரதமர் அடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, மற்றும் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, ஆர்.கே.சிங் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.  லோட்டே திஷெரீங்க் பிரதமராக பதவியேற்ற பின் மேற்கொண்டிருக்கும் முதல் அயல்நாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.