பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து சரிவு

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையேற்றத்தால் சென்ற மாதம் பெட்ரோல் டீசல் விலை பெரும் உயர்வை சந்தித்தது. இதனால், எதிர்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசை கடுமையாக விமரிசித்தனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. அதில் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்தது. மேலும், மாநில அரசுகளும் தங்கள் வரியிலிருந்து குறைத்துக்கொண்டால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும் என்றும் கேட்டுக்கொண்டது.

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் வரியை குறைத்துக்கொண்டன. இதனால், மக்களுக்கு சிறிது நிம்மதி ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் 23 காசுகள் குறைந்து  லிட்டர் 81.61 ரூபாய்க்கும் டீசல்  21 காசுகள் குறைந்து லிட்டர்  77.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்