பேட்ட....மாஸு....மரணம்

பேட்ட....மாஸு....மரணம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்,  நடிகர் கமலஹாசன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும், முக்கிய தலைவர்களும் ரஜினிகாந்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் ஏதேனும் அறிக்கை வெளியிடுவாரா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் டீசரை அந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  "பேட்ட பர்த்டே ட்ரீட் டீசர்" என்ற கேப்ஷனுடன் வெளிவந்திருக்கும் இந்த டீசரில் அனிருத் இசையில் "மரணம்...மாஸு மரணம்..." பாடல் பின்னணியில் ஒலிக்க ரஜினிகாந்த் ஸ்டாலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.