பேஸ்புக் டிவி அறிமுகம்

பேஸ்புக் டிவி அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதன்படி பேஸ்புக் நிறுவனம் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளை உலகத்தில் 200 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்ட்ரீமிங் டிவியை தயாரித்துள்ளது. ஆண்டிராய்டு பதிப்பில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த டிவி இந்திய சந்தையில், வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.