பைத்தியக்கார தேர்தல் அதிகாரியை உடனே மாற்று

பைத்தியக்கார தேர்தல் அதிகாரியை உடனே மாற்று

கேவலமான அரசியல் செய்யும் கீழ்த்தரமான அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் கோவிலின் உள் தாமரை, மற்றும் சில பூக்களின் படங்கள் ஆங்காங்கே தாயார், பெருமாளை வரவேற்க வரையப்பட்டிருக்கின்றது.

இந்தக்காலம் தாயார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடக்கக்கூடிய காலம் ஆகும். அதற்கான பத்து நாட்கள் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (13/03/2019) தான் நடைபெற்றது. தாயாரை வரவேற்க வரைந்த படங்களை இன்று தாயார் சன்னிதிக்கு வந்த தேர்தல் அதிகாரி ஒருவர் அவர் என்னவோ தேர்தலை சரியாக நடத்துபவனை போல தாயார் சன்னதிக்குள் வரையப்பட்டிருந்த தாமரைப்படங்கள் ஒரு கட்சியின் சின்னம் எனக்கூறி உடனே அந்த படங்களை அழிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு சென்று விட்டான். காவல்துறையினர் திருக்கோவிலின் செயல் அலுவலரை வலுக்கட்டாயப்படுத்தி அழித்து விட்டு தங்கள் கடமையை நிறைவேற்றி சென்றுள்ளனர்.


அழிக்க உத்தரவிட்ட அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியவில்லை, தாயார் தாமரைப்பூவிலே தான் வீற்றிருப்பவள் என, தேர்தல் ஆணையத்திற்கு, அதிகாரிகளுக்கு மதம் சம்பந்தப்பட்ட இடத்தில் என்ன பணி என புரியவில்லை. இவ்வளவு பேசும் அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியுமா, காங்கிரஸின் சின்னம் கை. அதை அனைவரின் கைகளில் இருந்து எடுக்க உத்தரவிடுவானா??

தி.மு.க வின் சின்னம் உதயசூரியன். அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா?? 
முசுலீம் கட்சி சின்னம் பிறை. அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா??

கத்தோலிக்க சர்ச்களில் மாதாவும் ஏசுவும் கைகளை கொண்டே ஆசிர்வாதம் வழங்கி கொண்டிருகிறார்கள். தைரியமுள்ள  அந்த அதிகாரி அதை மாற்றி விடுவாரா? மதச்சார்பற்ற அரசு அதிகாரிக்கு கோயில் வளாகத்தில் என்ன வேலை. கோயில்களில் உள்ள சாமிகள் எல்லாம் கையிலும் ஆசனத்திலும் தாமரையோடு தான் விற்றிருக்கிறார்கள், அதை மறைக்க சொல்லுவாரா? சொந்த புத்தியோடு செயல் படுகிறாரா அல்லது வேண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாரா? இது மாதிரியான பைத்தியங்களை பொறுப்பில் இருந்து விளக்குவது தேர்தல் ஆணையத்திற்கு நல்லது.


ஹிந்து ஆலயம் என்றால் அவ்வளவு இளக்காரமாகி விட்டதா உனக்குகிறுக்கு பிடித்து விட்டதா உனக்கு?, தேர்தல் ஆணையமே மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இது போல கிறுக்கு பிடித்த அதிகாரிகளை தலையிட வைக்காதேஅழிக்கப்பட்ட தாமரை படங்களை அந்த கிறுக்கு அதிகாரியின் செலவில் வரைந்து கொடுக்க உத்தரவிடு.