பொங்கலூரில் இந்து முன்னணி சார்பில் மகாலக்ஷ்மி யாகம்

பொங்கலூரில் இந்து முன்னணி சார்பில் மகாலக்ஷ்மி யாகம்

இந்து முன்னணி திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ஷோடஸமகாலக்ஷ்மி யாகம் மற்றும் பல ஆன்மீக நிகழ்ச்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக  திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில்  டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் 

கஜபூஜை,
108அஸ்வ (குதிரை)பூஜை, 
1008கோபூஜை,
மீனாட்சிதிருக்கல்யாணம்,
ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய  ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும்  மகாவிஷ்ணுவிற்கான சோடஷமஹாலட்சுமி மஹாயாகம் 24 அன்று துவங்கி 25 வரை  இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.

இதற்காக  360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.  இதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.  வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.

வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும், யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யும் தேவைப்படுகின்றன.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில்  பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு மஹாலட்சுமி ரதங்கள் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.  கோவை காந்தி பார்க் அருகில்  13/11/2018 அன்று காலை 11 மணியளவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.


 இதனை தொடர்ந்து நான்கு ரதங்களும் தங்கள் பயணத்தை துவங்கின. உங்கள் பகுதிக்கு இந்த ரதங்கள் வரும் போது,  மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட  செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் தங்களால் இயன்ற அளவில், வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் அனைவரும் தங்கள்  குடும்பத்துடன் கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி  இந்து முன்னணி  கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.