பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தமிழக அரசு 24.708  சிறப்பு பேருந்துகளை இயக்க இருக்கிறது இதில்  சென்னையிலிருந்து 14,263  பேருந்துகளும் மற்ற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கபடஉள்ளன. இவை ஜனவரி 11ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவங்கியது. மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்பதிவை துவக்கி வைத்தார். பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.