பொது தேர்வை முறைகேடின்றி நடத்த ஆலோசனை

பொது தேர்வை முறைகேடின்றி நடத்த ஆலோசனை

சென்னை மாவட்டத்தில், பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பான கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படைக்கான ஆலோசனைக் கூட்டம், இன்று நடக்கிறது.

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 1ல் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வை முறைகேடு இன்றியும், வினாத்தாள், 'லீக்' ஆகாமலும் தடுக்கும் வகையிலும், கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்வில், கண்காணிப்பு பணி மேற்கொள்வது, தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் சோதனை செய்வது, வினாத்தாள் மற்றும் விடைத்தாளை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.இது குறித்த ஆலோசனை சிறப்பு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.