பொள்ளாச்சி விவகாரத்தில் சமூக வலைதளங்களில்  சாமானியர்களுக்கு வந்துள்ள சந்தேகங்கள்

பொள்ளாச்சி விவகாரத்தில் சமூக வலைதளங்களில் சாமானியர்களுக்கு வந்துள்ள சந்தேகங்கள்

1) ஒரு மாதத்திற்கு முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.

2)பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த குடும்ப நண்பரின் உதவியுடன் அ.தி.மு.க வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் சந்தித்து அவரின் பரிந்துரையில் அன்றே அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3) அவர்களின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எனவே அவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது.

இப்போது வதந்திகளும் மர்மமும்

1) வழக்கு பதிவு செய்து ஒரு மாதமான பிறகு தேர்தல் தேதி அறிவித்தபின் உடனடியாக இந்த வீடியோ நக்கீரனால் வெளியிடப்பட்டுள்ளது.

2) கைது செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் யாரை கைது செய்ய வேண்டுமென கூறுகிறார்கள்?

3) திடீரென அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விட்டனர் என்றொரு செய்தி வேறு. 

4) முதலில் அந்த பெண்ணுடைய அண்னன் செய்தியாளர்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறார். பின்னர் அந்த பெண் ஒரு ஆடியோ வெளியிடுகிறார் ( அதை யாரோ எழுதி குடுத்து படிப்பதாக சொல்பவர்களுக்கு, கட்டாயம் அது எழுதி படிக்கப்பட்டது தான். ஒரு விஷயத்தை தெளிவாக விவரமாக சொல்ல விழையும் போது, அதை பெரும்பாலான மக்கள் கேட்கப்போகிறார்கள் எனும்போது எழுதி வைத்து அதை முறையாக படிப்பது நாம் அனைவரும் செய்வதே.) பின்னர் அந்த பெண்ணின் வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து தெளிவாக அனைத்தையும் விளக்குகிறார்.

5) 2 வருடங்களுக்கு முன்னர் ஜெயராமன் மகன் ஒட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானதை அவன் காரில் சில்மிஷம் செய்ததால் தான் ( மனைவியின் நியாபகம் வந்திருக்கலாம் அந்த பத்திரிகை நிருபர்க்கு) விபத்துக்குள்ளானது என்பதெல்லாம் உச்சக்கட்டம். 

கடைசியாக நக்கீரனும்  So Called Social media போராளிகளும் சொல்ல விழைவது என்னவென்றால் அந்த பெண் சொல்வதும் பொய், அவளின் அண்ணன் சொல்வதும் பொய், ஒரு மாத காலமாக அந்த வழக்கை கையாண்டு வரும் வழக்கறிஞர் சொல்வதும் பொய் இந்த காசுக்கு மாரடிக்கும் கூட்டம் சொல்வது மட்டுமே நிஜம்.

தயவுசெய்து தேர்தல் ஆதாயத்திற்க்காக இதில் கூட அரசியல் செய்யாதீர். 

அந்த விடியோவை பார்த்துவிட்டு தமிழ்நாடே கொந்தளித்து உள்ளது. ஆனால் உண்மை எது என்று தெரியாமல் அனைத்தையும் பரப்பி இவர்களின் அரசியலுக்கு அந்த பெண்ணை பலிகடா ஆக்காதீர்கள்.